திருப்பதி கோவிலில் 50 சதவீத இலவச தரிசன அனுமதி : பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குத் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும் ஆந்திர மாநில பாஜக பொதுச் செயலாளருமான பானு பிரகாஷ் ரெட்டி தரிசன ஏற்பாடுகளைச் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நாட்டு மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் விடுபட்டு முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென வேண்டிக் கொண்டேன்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது 20 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கட்டண தரிசனத்தில் தான் வரும் பக்தர்களின் அதிக அளவில் அனுமதிக்கப்படுகின்றனர். இலவச தரிசனத்தில் 2 ஆயிரம் பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இதனை மாற்றி 50 சதவீத பக்தர்களை இலவச தரிசனத்தில் அனுமதிக்க வேண்டும். இது ஆந்திர மாநில முதல்வருக்கும், அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுத உள்ளேன் என அவர் தெரிவித்தார்.

More News >>