நடிகர் சோனு சூட்டிற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் கவுரவம்

பாலிவுட் நடிகரான சோனு சூட் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகள் செய்துள்ளார். தற்போதும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

மிர்சாபூர் பகுதி கிராமத்தில் உள்ள பிள்ளைகள் 5ம் வகுப்புக்கு மேல் படிப்பை நிறுத்தி வந்தனர். அதற்குக் காரணம். 6ம் வகுப்பு படிக்கப் பல கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல வேண்டும் அல்லது காட்டுப்பகுதிகளில் செல்ல வேண்டும். மிருகங்கள் தொந்தரவு மற்றும் பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பதால் படிப்புக்கு முழுக்கு போட்டனர்.

சோனு சூட்டுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. உடனடியாக கிராமத்தில் உள்ள அத்தனை மாணவ மாணவியருக்கும் பேருக்கும் சைக்கிள் வாங்கி கொடுத்துவிட்டார். இன்னும் ஏராளமான பல உதவிகளைச் சமீபத்தில் ஐ.நா அமைப்பு சோனு சூட்டின் சமூக சேவையைப் பாராட்டி அவருக்குச் சிறந்த மனித நேய செயல்பாட்டாளருக்கான விருது அளித்தது .தற்போது பஞ்சாப் தலைமைத் தேர்தல் அதிகாரி கருணா ராஜூ இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய பரிந்துரையில், சோனு சூட்டைப் பஞ்சாபின் மாநில சிகானாக (அடையாள சின்னமாக )நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் ஆணையம் சார்பிலும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

More News >>