கொரோனா இல்லை : பெயர் தட்டிச் சென்றது பெரம்பலூர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 4 மாதங்களுக்கு மேல் மக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டியதாயிற்று. இதனால் பலர் வேலை இழந்து பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். அதனால் அரசு தரப்பில் மக்களுக்கு ஓரளவு நிதியுதவியும் இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2,228 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகவில்லை . பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 21 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்