தமிழுக்கு வரும் தாஜ்மகால் நடிகையின் சகோதரி..
பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் அறிமுகமானவர் ரியா சென். பின்னர் சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் பிறகு இந்தியில் நடிக்கச் சென்றார். அவரது சகோதரி ரைமா சென். இவர் இந்தி பெங்காலி படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் அக்னி சிறகுகள் படம் மூலம் தமிழில் நடிக்க வந்திருக்கிறார்.சில நாட்களுக்கு முன்பு, திரைப்பட தயாரிப்பாளர் நவீன், ரைமா சென் உடனான ஒரு படத்தையும், விஜய் ஆண்டனியையும் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார், பெங்காலி மற்றும் இந்தி திரையுலகில் புகழ் பெற்ற ரைமா சென்.
இவர் தனது இணைய தள பக்கத்தில் தமிழில் அறிமுகமாகவுள்ளதாக அறிவித்தார்.அக்னி சிறகுகள், ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்காகப் படப் பிடிப்பில் பங்கேற்றதாகக் கூறி உள்ளார். இதுபற்றி ரைமா சென் கூறியதாவது:கடந்த ஆண்டு என்னை இப்படத்தில் நடிக்கக் கேட்டு அணுகினார்கள். கடந்த ஆண்டு சென்னை மற்றும் கொல்கத்தாவில் நிறையப் படங்களின் படப்பிடிப்பை முடித்தோம்.
ஊரடங்கிற்குப் பிறகு மீதமுள்ள பகுதிகளை நாங்கள் முடித்தோம். தமிழில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விருப்பமாக இருந்தேன். என் சகோதரி (தாஜ்மகால் நடிகை ரியா சென்) தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார், அவரிடமிருந்து தொழில் பற்றி நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டேன். எனவே, இப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏன் கூடாது என்று ஒப்புக்கொண்டேன். இது ஒரு அதிரடி த்ரில்லர், எனக்கு ஒரு வில்லத்தனமான பாத்திரம். விஜய் ஆண்டனி பற்றிய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டி ருக்கிறேன். எனவே, தமிழ் திரையுலகில் எனது அடையாளத்தை வெளிப்படுத்த இதை விடச் சிறந்த வழி என்ன? ”கடந்த ஆண்டு சென்னையில் தான் இப்படத்தின் படப் பிடிப்பை முதல் முறையாகத் தொடங்கினேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரத்திற்கு வந்திருக்கிறேன்.
எனவே, படப்பிடிப்புக்கு இங்குத் திரும்பி வருவது மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி ஒரு இனிமையாகப் பழகக் கூடியவர். மிகுந்த நகைச் சுவை உணர்வுடன் பேசுபவர். அக்ஷரா ஹாசனையும் இப்படத்தில் சந்தித்தேன், அவர் இனிமையானவளர். சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்றது இனிய அனுபவ மாக இருந்தது. தமிழில் அறிமுகமானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.தமிழில் பேசுவது கடினமாக இருந்தது ஆனால் தயாரிப்பாளர் அதைப் பேசச் சொல்லித் தந்தார். தமிழ் கற்க எளிதான மொழி என்று ரியா கூறினார், ஆனால் என்னைப் பொறுத்த வரை தெலுங்கு புரிந்து கொள்வது எளிது. தமிழ் கடின மானது என்று நான் கூறுவேன், இவ்வாறு ரைமா சென் கூறினார்.