மத்தியப் பிரதேசத்தில் பசு அமைச்சரவை.. சவுகான் தகவல்..

மத்தியப் பிரதேசத்தில் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவும், பசு வளர்ப்பு தொடர்பான தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் பசு அமைச்சரவை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், பசுக்களை வளர்ப்பதற்காகக் கோசாலை உள்பட சில திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், பசுக்களை வளர்ப்பது, பாதுகாப்பது மற்றும் இது தொடர்பான தொழில்களின் மேம்பாட்டுக்காகப் பசு அமைச்சரவை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரவையில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, வனம், ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி, உள்துறை போன்ற அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் இதன் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

More News >>