சசிகலாவுக்காக ரூ. 10 கோடி அபராதம் செலுத்தியது யார்?
சசிகலா சார்பில் ரூ. 10 கோடியே 10ஆயிரம் அபராத தொகை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதற்கான வங்கி வரைவோலையை நீதிபதி சிவப்பாவிடம் நவம்பர் 15 மாலையில் சசிகலாவின் வழக்கறிஞர்கள் சி.முத்துகுமார் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியூர் அளித்ததாகத் தகவல் வெளியானது. சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை இன்னும் ஓரிரு நாட்களில் செலுத்தப்படும் என்று மன்னார்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சசிகலாவுக்காக 10 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு வங்கி வரைவோலை எடுத்தது யார்? யார் என்ற விபரம் வெளியாகி உள்ளது.பழனிவேல் என்பவர் பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.3.25 கோடி வரைவோலை வசந்தா தேவி என்பவர் பெயரில் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது. ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. விவேக் பெயரில் ஆக்சிஸ் வங்கியில் ரூ.ஒரு கோடிக்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், அபராதத்தொகையும் கட்டப்பட்டுள்ளதால், சசிகலா விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.