விஜய் கட்சியின் தலைவர் ராஜினாமா

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய் மக்கள் இயக்கம் என்கிற அமைப்பைத் தொடங்கியாதுடன் அதை தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த பத்மநாபன் என்ற ராஜாவை மாநிலத் தலைவராகக்கொண்டு கட்சி பதிவு செய்யப்பட்டது. ஆனால், தந்தையின் இந்த அரசியல் நடவடிக்கை நடிகர் விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவே, தனக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்று அதிரடியாக அறிவித்தார். அதே சூட்டுடன் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜய்யின் தாயார் ஷோபாவும் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இந்தநிலையில், கட்சித் தலைவரான பத்மநாபன் தான் உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்துவருவதாகவும், தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் புஸ்ஸி ஆனந்த் என்பவர் தான் என்று ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடங்கிய கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துகொள்வதாக அறிவித்திருக்கிறார்.

More News >>