வெள்ளையினத்தினருக்கே முக்கியவதும்?!.. நிறவெறி சர்ச்சை இங்கிலாந்து கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அம்பயர் ஜான் ஹோல்டர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரி்யத்தில் நிறவெறி கொள்கை இருந்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை முன்வைத்துள்ளது இங்கிலாந்து ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. "ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ" இணையதளத்தில் அளித்த பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஹோல்டர்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரி்யத்தில் நிறவெறி மற்றும் இனவெறி இருப்பதாகவும், ஆனால் தான் நிறவெறி நடவடிகைக்கு ஆளானதில்லை என்றும் அதில் கூறியுள்ளாா். இருந்தபோதிலும் கிரிக்கெட் வாரி்யத்தின் நியமனங்களை ஆராய்ந்து பாா்த்தால் பல ஆண்டுகளாக இனவெறி கலாச்சாரம் பின்ற்றப்படுவது தெரிய வருகிறது எனக் கூறியுள்ளாா்.

மேலும், தான் ஐசிசி-க்கு பணியாற்றுவதை நிறுத்திய பிறகு கிரிகெட் வாரியத்தில் பணிக்கு சேர வாரியத்தை தெடர்பு கொண்டதாகவும் ஆனால் வாரியம் உரிய பதிலை கூறவில்லை எனவும், அதேநேரம் அனுபவம் இல்லாத முன்னாள் வீரர்களுக்கு வாரியம் வாய்ப்பு கொடுத்தது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஹோல்டர் கிரிக்கெட்டுக்கான நடுவரை நியமிப்பதில் வெள்ளை இனத்தவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிற கொள்கை இருந்து வருவதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். மேலும் ``1992 ஆம் ஆண்டு தான் இறுதியாக வெள்ளையினத்தை சாராத வான்பர்ன் ஹோல்டர் முதல் தர கிரிக்கெட் நடுவராக இருந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிவோன் மால்கம்முக்கே சிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்கே வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் எனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" எனக் கூறி இங்கிலாந்து கிரிக்கெட் உலகை அதிரவைத்துள்ளார்.

More News >>