கோவையில் ஸ்டாலினை கிண்டல் செய்து மீண்டும் போஸ்டர்கள்

திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து கோவையில் மறுபடியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன இதை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக திமுகவில் ஸ்டாலினும், அதிமுக வில் எடப்பாடி பழனிசாமியும் களமிறங்க உள்ளனர்.கடந்த ஒரு மாத காலமாகவே இரு கட்சிகளும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி விட்டனர்.

ஒரு சில இடங்களில் போஸ்டர்களும் சுவர் விளம்பரங்கள் தயாராகிவருகிறது. கோவை மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலினைக் கிண்டல் கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இது சர்ச்சையைக் கிளப்பி ஓய்ந்த நிலையில் மீண்டும் அதே ரீதியில் ஸ்டாலினைக் கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ரயில்வே ஸ்டேஷன், டவுன் ஹால், லங்கா கார்னர் பகுதிகளில் இந்த போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்களுடன் ஊரடங்கில் அயராது உழைத்தவரா? விக் மாட்டியவரா? என ஒரு விதமாகவும் விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா? என்ற வாசகங்கள் அடங்கிய இன்னொரு விதமாகவும் உள்ளது.

இந்த போஸ்டர்களை தயாரித்தது யார் அச்சிட்ட அச்சகம் இதில் என்ற விவரங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் எடப்பாடிக்கு ஆதரவாகக் காட்டும் வகையில் இந்த போஸ்டர்களில் அச்சிட்டுப் பட்டுள்ளதால் ஆளுங்கட்சியான அதிமுகவினர் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று திமுகவினர் கருதுகின்றனர் இன்று காலை டவுன் ஹால் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.

More News >>