தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு.. வீடியோ வெளியிட்டார்..

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி அதிகாரியின் நியமனத்துக் குத்தடை விதிக்க மறுத்து விட்டது. ஆனால், தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. ஜூன் 30-ம் தேதிக் குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் வந்தவுடன், ஊரடங்கைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி கடந்த மே மாதம் தயாரிப்பாளர் சங்கம் அவசர வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கையை சிறப்பு அதிகாரி அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி செப்.30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்கவில்லை. இந்நிலையில், நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த காலக்கெடுவுக்குள் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படாததால், தேர்தலை நடத்தி முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும், தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்து அது குறித்த அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயச்சந்திரன் அறிவித்தார். சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் நவம்பர் 22 அன்று காலை 8 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடை பெறும் என்றும் அவர் அறிவித்தார். அதன்படி வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தன. எம் ராமசாமி என்கின்ற தேனாண்டாள் என்.முரளி தலைமையில் ஒரு அணியும். டி.ராஜேந்தர் தலலையிலான ஒரு அணியும் பி.எல்.தேனப்பன் தலைமையிலான ஒரு அணியும் என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன மற்றொரு அணி செயற்குழு உறுபினர்களுக்கு மட்டும் போட்டியிடுகிறது. ஒவ்வொரு அணியும் தங்கள் வெற்றி பெர்று வந்தால் சங்க உறுப்பினர்களுக்கும் சிறு படதயாரிப்பாளர்களுக்கும் என்னென்ன நன்மைகள் செய்வோம் என்று அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடத்தும் அதிகார் நீதியரசர் ஜெயச்சந்திரன் இன்று தேர்தல் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார் அதில், சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஜூம் வீடியோவில் அழைத்து பேசினேன். அதில் தேர்தல் 22ம் தேதி நடத்த ஒப்புக்கொண்டனர். காலையில் தொடங்கி மாலைவரை வாக்கு பதிவு நடக்கும் ஆனால் வாக்கு எண்ணிக்கையை மறுநாள் நடத்த கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அன்று காலையில் வாக்கு எண்ணிக்கை நடந்து மாலையில் மொத்த வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

More News >>