போலீசுக்கு இனி வாரம் ஒரு நாள் லீவு..
காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கச் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தினமும் இடைவேளை இன்றி முழு நேரப் பணி, தீபாவளி , பொங்கல் போன்ற முக்கிய விழாக்களில் கூட சட்டம்-ஒழுங்கு காப்பது என்ற முக்கியமான பணி காரணமாக தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர் . ஓய்வின்றி விடுப்பு இன்றி பணியாற்றுவதால் காவல்துறையினர் பலர் மன அழுத்தம் ஏற்பட்டு விபரீதமான முடிவை எடுக்கும் நிகழ்வுகளும் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.
இதையடுத்து நீண்ட காலமாகக் கோரி வருகின்றனர் எனினும் இது பாதுகாப்பு சார்ந்த மற்றும் சட்டம் பிறந்து சார்ந்த பணி என்பதால் உடன் மட்டுமே காவலர்கள் ஓய்வு எடுக்கின்றனர். கடந்த ஆண்டு காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றமும் சாதகமான கருத்தையே தெரிவித்திருந்தது . இந்த நிலையில் தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் எனச் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
இந்த உத்தரவு சென்னை தவிர அனைத்து மாநகர காவல்துறை ஆணையர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து இனிமேல் காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை சுழற்சி அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.