ஹிஜாப் உடன் அழகிப் போட்டியில் பங்கேற்ற முதல் பெண்!
அழகிப் போட்டியில் பெண் ஒருவர் சர்வதேச அளவிலேயே ஹிஜாப் உடன் பங்குபெற்ற முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் மாகாணத்தைச் சேர்ந்தவர் மரியா முகமது. 20 வயதான மரியா இளங்கலை உளவியல் பிரிவு மாணவி ஆவார். கடந்த வாரம் பர்மிங்ஹாம் அழகிப்போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கையுடன் தற்போது மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியிலும் பங்கெடுத்து வருகிறார்.
தற்போது காலிறுதியை எட்டியுள்ள மரியா முகமது ஹிஜாப் உடன் ரேம்ப் வாக் செய்து வருகிறார். உலகளவிலேயே ஹிஜாப் அணிந்து அழகிப் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மரியா முகமது. இதற்கு முன்னர் இஸ்லாமியப் பெண்கள் அழகிப் போட்டியில் பங்கு பெற்றிருந்தாலும் ஹிஜாப் உடன் பங்குபெற்ற முதல் பெண் என்ற சிறப்பு அந்தஸ்தை எட்டியுள்ளார் மரியா முகமது.
தற்போது நடைபெற்று வரும் மிஸ் இங்கிலாந்து போட்டியில் வென்றால் நேரடியாக மிஸ் உலக அழகிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகிறார் மரியா.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com