நான்கு ஆண்டுகளில் இல்லாத விலையேற்றம்...அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
தேசிய அளவில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் இன்றைய பெட்ரோல், டீசல் விலை தான் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய தேசிய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 73.73 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 64.58 ரூபாய் ஆகவும் விற்பனை ஆகிவருகிறது.
2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் மத்திய எண்ணெய் வள அமைச்சகம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்கச் சொல்லி மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அமைச்சகத்தின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் மத்திய நிதி பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டார்.
அதன் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச அளவில் ஏற்பட்ட எண்ணெய் வளங்களுக்கான வீழ்ச்சியின் போது பெட்ரோல், டீசல் விலை இரண்டு ரூபாய் அளவில் மட்டுமே குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இதுவரையில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை ஏறியுள்ளது.
சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் சில்லரை வணிகத்தில் அதிக விலையில் எண்ணெய் வளங்கள் விற்கப்படும் ஒரே நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com