இனி 100 சதவீதம் மின்சார கார்களே... இங்கிலாந்தின் அதிரடி திட்டம்!

இன்றைய உலகில் சுற்றுசூழல் மாசுபாடு என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் சுற்றுசூழல் மாசுபாடுகளை தடுக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கால உலகினை நலனை கருத்தில் கொள்ளும் வகையிலும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இங்கிலாந்து அரசு.

அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் வரும் 2030ம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் போரிஸ்., முதலில் இந்த தடை 2040 ஆம் ஆண்டு நடைமுறைபடுத்த இருந்தது. ஆனால் தற்போது 2030 க்குப் பிறகு இத்தடையை அமல்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. போரிஸ் ஜான்சனின் சுற்றுசூழல் திட்டத்தின் 10 அம்சத்தின் கீழ், இது செயல்படுத்தப்படும்.

இங்கிலாந்தில் தற்போது ஒரு சதவீதத்திற்கும் குறைவான மின்சார கார்கள் இருக்கிறது. இதனை 100 சதவீதமாக மாற்றும் முயற்சியே இந்த தடை என்றும் கூறப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் கார்களின் தயாாிப்பு நிறுத்தப்பட்டு அதற்கான முதலீட்டை மின்சார கார் தயாாிப்பு தொழில்நுட்பத்தில் செலுத்தப்படும் எனவும், மேலும் இதனை பசுமை புரட்சி திட்டமாகவும், அதற்காக 12 பில்லியன் டாலர் செலவிடப் போவதாகவும் இதனால் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>