அமெரிக்கா-ஆஸ்திரேலியா இடையே நாளை மோதுகிறது சீன விண்வெளி ஆய்வு நிலையம்
சீனாவுக்கு சொந்தமான விண்வெளி ஆய்வு நிலையம் பழுதடைந்த நிலையில் நாளை அமெரிக்கா-ஆஸ்திரேலியா இடையே மோதுகிறது. இந்த தகவல் அந்நாட்டை சேர்ந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனா கடந்த 2011ம் ஆண்டு டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் தயாரித்து விண்ணில் செலுத்தியது. இது கடந்த 2016ம் ஆண்டில் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் எதிரொலியாக, இந்த விண்வெளி ஆய்வு நிலையம் விரைவில் பூமியின் மீது மோதும் என ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த விண்வெளி நிலையம் பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நாளை அமெரிக்கா&ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே மோதுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 8500 கிலோ எடை கொண்ட அந்த ஆய்வு நிலையம் பூமியின் மீது மோதும்போது விண்கல் மோதிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அதில் நிரப்பப்பட்டுள்ள எண்ணெய் போன்ற ஹைட்ரஜன் வாயுவை மனிதர்கள் சுவாசித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்வெளி நிலையம் நாளை காலை 7.25 மணியளவில் பூமியின் புவி ஈர்ப்பு விசை சக்திக்கு உட்பட்ட பகுதிக்குள் நுழைகிறது. இதைதொடர்ந்து, அமெரிக்கா&ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் குறிப்பாக, அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் தெற்கு பகுதி அல்லது வடக்கு கலிபோர்னியாவில் இருந்து பென்சில்வேனியாவுக்கு உட்பட்ட பகுதியில் இந்த பழுதடைந்த ஆய்வு நிலையம் மோதும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com