விபிஎப் கட்டணம் ஒப்பந்தத்தால் புதுபடங்கள் கியூ.. தியேட்டர்கள் பிஸியாகிறது..
கொரோனா ஊரடங்கில் 7 மாதங்களுக்குப் பிறகு தீபாவளியொட்டி கடந்த 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் வி பி எப் கட்டணம் தொடர்பாக தியேட்டர்காரர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தன. இடைக்காலமாக விபிஎப் கட்டணம் சில வாரங்களுக்கு நீக்கப்பட்டதால் பிஸ்கோத், இரண்டாம் குத்து போன்ற படங்கள் வெளியாகின.இதற்கிடையில் மீண்டும் விபிஎப் கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. பாரதிராஜா, தியேட்டர் அதிபர்கள் திருப்பூர் சுப்ரமணியம், பன்னீர் செல்வம். கியூம் நிர்வாகி ஆகியோர் கலந்து கொண்டதில் புதிய உடன்பாடு எற்றப்பட்டது. அதில் மூவரும் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து புதிய படங்கள் ரிலீஸிக்கு தயாராகி வருகின்றன.ஏற்கனவே, என் பெயர் ஆனந்தன் படம் வரும் 27ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் கோட்டா என்ற படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து தற்போது" இது என் காதல் புத்தகம் " தியேட்டர் ரிலீஸுக்கு தயாராகி விட்டது.
முன்னதாக, இது என் காதல் புத்தகம் படத்தின் ஆடியோவை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார், அதைத் தொடர்ந்து படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகிற்கு பிரமாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் வெளியிட்டார்.இப்படி பிரபலங்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ள " இது என் காதல் புத்தகம் " படத்தை மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மது ஜி கமலம் இயக்கியுள்ளார்.பிஜு தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜினு பரமேஷ்வர், ஜோமி ஜேக்கப் ஆகிய நால்வரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக அஞ்சிதா ஸ்ரீ நடித்துள்ளார்.இவர்களுடன் குள்ளப்புள்ளி லீலா, ராஜேஷ் ராஜ், சூரஜ் சன்னி, ஜெய் ஜேக்கப் ஆகியோரும் நடித்துள்ளனர்.ரோஸ்லேண்ட் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. எம்.எஸ்.ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமியோடு, பிரவீன் கிருஷ்ணா இணைந்து பாடிய " என்னாத்தா " என்ற பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கலக்கிக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற சில உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகி இருக்கிறது இப்படம். பெண் கல்வியின் அவசியத்தையும், வாலிபப் பருவங்களில் ஏற்படும் மனக் குழப்பத்தைப் பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நகைச் சுவை கலந்து உருவாகியுள்ளது.இந்த படத்தைத் தமிழகத்திலும், கேரளத்திலும் இயற்கை எழில் மிகுந்த லொகேஷன்களில் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா, சஜித் கட்சிதமாக காட்சிகளை எடிட்டிங் செய்துள்ளார்.கொரோனா விட்டுச் சென்ற ரணங்களை ஆற்ற வருகிற நவம்பர் 27 ஆம் தேதி தமிழகமெங்கு வெளியாகிறது " இது என் காதல் புத்தகம் ".