நவ 23 ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
வங்கக் கடலில் நவம்பர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன்மூலம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும்.எனவே, அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, கனமழை பெய்யக்கூடும்.ராமநாதபுரம், புதுக்கோட்டையிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டைச் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது