தீக்குளித்த ம.தி.மு.க நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நியூட்ரினோ திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த ம.தி.மு.க நிர்வாகி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனீ மாவட்டம் போடியில் நியூட்ரினோ திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, அரசியல் காட்சிகள், அமைப்புகள், பொது மக்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 31ம் தேதி மதுரையிலிருந்து - தேனீ வரை (200 கீ.மீ) தனது நடைப்பயணத்தை தொடங்கினார். இதில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் பங்கேற்றார்.

அப்போது, விழா மேடை அருகே வைகோவின் ஆதரவாளர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதை சற்றும் எதிர்பாராத வைகோ பதறினார். தீயை அணைத்து பின்னர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விசாரணையில் அவர் ம.தி.மு.க. நிர்வாகி ரவி என்றும் சிவகாசியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. பின்னர் பேசிய வைகோ தனது கட்சியின் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் மிகுந்த வேதனைக்கு ஆளாக்கியது. அவரின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்லப்போகிறேன் என்று தெரியவில்லை எனக் கூறி கதறி அழுதார்.

இந்நிலையில் பலத்த தீக்காயம் அடைந்த ரவி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>