கைது செய்துகொள்ளுங்கள் பரவாயில்லை... போலீஸின் எச்சரிக்கையும் மீறி உதயநிதி பிரச்சாரம்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக இளைஞரணி செயலலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 100 நாள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அதன்படி, திமுக முன்னாள் தலைவரும் அவரின் தாத்தாவுமான கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து பிரச்சாரம் செய்ய தீர்மானித்தார். சற்றுமுன் தனது பிரச்சாரத்தை துவக்கினார் உதயநிதி. ஆனால் பிரச்சாரத்துக்கு முறையான அனுமதி வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து மேடையில் ஏறுவதற்கு முன்னதாக மேடைக்குச் சென்றால் கைது செய்வோம் என உதயநிதியை போலீசார் எச்சரித்தனர்.

போலீசின் எச்சரிக்கையும் மீறி மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார் உதயநிதி. இதன்பின் பேசிவிட்டு கீழே இறங்கும்போது போலீசார் உதயநிதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தனது டுவிட்டர் பக்கத்தில், ``அடிமை அதிமுக-பாசிச பாஜகவுக்கு எதிராக மொத்த தமிழகமும் உள்ளது. அந்த உணர்வை ஒன்றுபட்டு ஒருங்கிணைக்க 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரச்சார பயணத்தை திருக்குவளையில் இன்று தொடங்கினேன்.அதை முடக்க நினைத்து கைது செய்கின்றனர். எங்கள் உணர்வை அடக்க அடக்க வெகுண்டெழுவோம்-தமிழகம் மீட்போம்!" என்று திருமண மண்டபத்தில் இருந்து டுவீட் செய்துள்ளார்.

More News >>