சினேகன் காரில் சிக்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி
கவிஞரும் மக்கள் நீதி மையத்தின் மாநில இளைஞர் அணி செயலாளருமான சினேகன் கடந்த 15ம் தேதி இரவு புதுக்கோட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்த நிலையில் திருமயம் அருகே உள்ள சவேரியார்புரத்தில் ஓட்டி சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த அருண் பாண்டி என்ற வாலிபர் படுகாயமடைந்தார். புதுக்கோட்டையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.