நெட்பிளிக்ஸ் இரு நாட்கள் இலவசமாம்

டிவி சேனல்களை அடுத்த பரிமாணமான ஓ.டி.டி. தளங்கள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரு இணைய இணைப்பும் டிவியில் இருந்தால் போதும் எந்த நிகழ்ச்சிகளையும் எந்த நேரத்திலும் கண்டுகளிக்க முடியும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போலக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என்ற கட்டுப்பாடு இதில் இல்லை. இதன் காரணமாகவே இதுபோன்ற வசதி பிரபலமாகி வருகிறது இது தவிர தற்போது கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த காலத்தில் பல புதிய திரைப்படங்கள் ஓ.டி.டி வழியாகவே ரிலீஸ் ஆனதும் குறிப்பிடத்தக்கது

அதேசமயம் இதுபோன்ற ஓ.டி.டி தளங்களில் திரைப்படங்கள், சீரியல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த கட்டணம் குறைவாக இருப்பினும் காலாண்டு அல்லது ஓராண்டிற்குத் தான் செலுத்த முடியும் என்பது இதில் உள்ள மைனஸ் பாயிண்ட். இது தவிர இணையத்தள இணைப்பிற்கு வேறு தனியாகப் பணம் செலுத்த வேண்டும் என்பதால் இன்னும் முழு அளவில் இதுபோன்ற ஓ.டி.டி தளங்கள் பிரபலமாகவில்லை .

இதனால் இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்கள் முழுக்க முழுக்க இலவசம் என்ற திட்டத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படிவரும் டிசம்பர் மாத, முதல் வார இறுதி நாட்களில் கட்டணம் செலுத்தாமலே நெட்பிளிக்ஸை இயக்க முடியும். டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இந்த இலவச சேவை வழங்கப்படும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த சேவை வழங்கப்படுகிறது.

இந்திய மக்கள் அனைவரும் நெட்பிளிக்ஸில் உள்ள திரைப்படங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இந்த முடிவை எடுத்ததாக அந்நிறுவனத்தின் முதன்மை அலுவலர் கிரெக் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

netflix.com/StreamFest என்ற இணையதளத்தில் Sign up செய்து இந்த இலவச சேவையைப் பெறலாம் என்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

More News >>