கைகொடுத்த காற்றாலை... அம்பானியை தூக்கிச் சாப்பிட்ட அதானி!
குஜராத் மாநிலத்தை சார்ந்தவர் கவுதம் அதானி. அதானி முதன் முதலில் வைர வியாபாரியாக தனது தொழிலை தொடங்கியுள்ளாா். பின்பு பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, கட்டுமானம் என பல தொழில் துறைகளில் முத்திரை பதித்து இப்பொழுது இந்திய பணக்காரா்கள் பட்டியிலில் ஒருவராக இணைந்துள்ளாா். அதானி ஏற்கனவே 30.4 பில்லியன் அமெரிக்க டாலா்களுக்கு சொந்தகாரா். இருப்பினும் நடப்பு ஆண்டில் மட்டும் சுமாா் 19.1 பில்லியன் அமெரிக்க டாலா்கள் சம்பாதித்து தன் சொத்து மதிப்பை அதிகரித்துள்ளாா்.
கணக்குபடி பார்த்தால் சுமார் பத்து மாதங்கள் நாள் ஒன்றுக்கு 449 கோடி வீதம் என தன் சொத்து மதிப்பை அதிகரித்து இந்தியாவின் முதல்நிலை செல்வந்தராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார் அதானி என செய்திகள் கசிந்துள்ளன. நடப்பு ஆண்டில் 16.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை தன் சொத்து மதிப்பில் சேர்த்துள்ளாா் அம்பானி என்பது குறிப்பிடதக்கது.
அதேநேரம் அதானி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காற்றாலை மின் உற்பத்தி, புதிபிக்கதக்க ஆற்றல் சக்தி கொண்ட சோலாா் மற்றும் மின் விநியோகம் மாதிரியான தொழிலின் மூலமாக தன் வருவாயை அதிகரித்துள்ளாா் அதானி.
அதுமட்டுமின்றி அதானி எண்டர்பிரைசஸ், அதானி கேஸ்,அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றின் பங்குகளின் விலை அதிகரிப்பால் இதை சாதகமாக்கியுள்ளாா் அதானி என வல்லுநர்கள் கூறியுள்ளனா். தற்போது உலக அளவில் அதிக சொத்துக்கள் சேர்ப்பவர்கள் பட்டியலில் 9 இடத்தையும் பணம் படைத்த செல்வந்தர்களின் பட்டியலில் 40 இடத்தையும் பெற்றுள்ளாா் அதானி என்பது குறிப்பிடதக்கது.