பஞ்சாப் விவசாயிகளால் ஏற்பட்ட ரூ.2220 கோடி வருவாய் இழப்பு!
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் தான் வருவாய் இழப்புக்கு காரணம் என இந்திய ரயில்வே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது என ஐஏஎன்எஸ் செய்தி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் மசோதாவை எதிர்த்து பஞ்சாப்பில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் ரயில்களை மறுத்ததால் பெரும் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 24 முதல் 55 நாட்களில் ரூ.825 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் பயணிகள் ரயில்களை ரத்து செய்ததன் மூலம் 67 கோடியும், சரக்கு ரயில்களை ஏற்றாததால் வடக்கு ரயில்வே நாளொன்றுக்கு ரூ .14.85 கோடி வீதம் மொத்தமாக 55 நாட்களில் ரூ. 2220 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே கூறியுள்ளது.
போராட்டங்களால் சரக்குகள் பஞ்சாபிற்கு வெளியே 230 ரேக்குகள் மாட்டிக்கொண்டது. இதில் 78 ரேக்குகளில் நிலக்கரி, 34 ரேக் எரு, எட்டு ரேக் சிமென்ட், எட்டு ரேக் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் 102 ரேக் கொள்கலன், எஃகு மற்றும் பிற பொருட்கள் இருந்துள்ளது. இவை பஞ்சாப்புக்குள் வராமல் மாட்டிக்கொண்டுள்ளநிலையில் மேலும் 2352 பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய ரயில்வே கூறியுள்ளது.