அமித் ஷா மீது பதாகை வீசியவர் கைது

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு காரில் சென்று கொண்டிருக்கையில் திடீரென காரை நிறுத்தி ரோட்டில் நடந்து வந்தார். ரோட்டின் இருபுறமும் நின்று கொண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையை அசைத்தபடி அவர் வந்து கொண்டிருந்தார்.அப்போது பார்வையாளர்கள் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் அவர் மீது ஒரு பதாகையை வீசினார்.

இதையடுத்து பாதுகாப்புக்கு அங்கிருந்த போலீசார் அந்த நபரைப் பிடித்தனர். முதலில் அவர் மனநலம் சரி இல்லாதவர் அதனால்தான் இப்படிச் செய்து விட்டார் என்று ஒரு தகவல் பரவியது பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்அவர் பெயா் துரைராஜ் (62) என்றும் சென்னை நங்கநல்லூரை சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நங்கநல்லூரில் சுவா் விளம்பரம் செய்வதில் திமுக மற்றும் பாஜகவினருடையை இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் பாஜகவினர் சென்னை நங்கநல்லூரில் திமுகவை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். அந்த ஆா்ப்பாட்டத்தில் இடையே புகுந்து,பிரதமா் மோடி அறிவித்த ரூ.15 லட்சம் பணம் எங்கே? என்று கோஷமிட்டவா் தான் இந்த துரைராஜ். இதனால் கோபமடைந்த பாஜக தொண்டர்கள் அவரை அடித்து உதைத்து அனுப்பினர். பழவந்தாங்கல் போலீசாா் அவரை மீட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

அதே துரைராஜ் தான் இப்போது மீண்டும் சிக்கியுள்ளதால்,இம்முறை போலீசாா் கைது செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனா்.

More News >>