வாட்ஸ் ஆப் மூலம் தங்கம் அனுப்பலாம்..
தங்கம் வாங்குபவர்கள் கடைகளுக்குச் சென்று நகை அல்லது நாணமயமாகவோ அல்லது கட்டிகளாகவோ வாங்க வேண்டியிருந்தது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப சேவையின் மூலம் தங்கத்தை ஆன்லைன் முறையில் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதை பேப்பர் கோல்டு என்றும் சொல்வதுண்டு.இதில் இன்னும் ஒரு படி மேலே போய் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க முடியும்.
மொபைல் வேலெட் சேவை பேடிஎம், போன் பே போன்ற தளத்தில் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பின் கோல்டு ரஷ் திட்டத்தின் மூலம் டிஜிட்டல் தங்கம் வங்க முடியும். அப்படி வாங்கும் டிஜிட்டல் தங்கம் எம்.எம்.டி.சி.-pi. ஏ.எம். பி. (MMTC-PAMP) அல்லது சேப் கோல்டு (Safe Gold ) என்ற அமைப்பின் கீழ் தான் வாங்கப்படுகிறது.
ஆன்லைன் தளத்தில் வாங்கப்படும் தங்கத்தைப் பாதுகாப்பாக வைக்கவும், எவ்விதமான , அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தங்கம் திரட்டுதல் ( Gold accumulation ) என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு டிஜிட்டல் தங்க விற்பனையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் டிஜிட்டல் முறையில் வாங்கப்படும் தங்கத்தை வாட்ஸ்அப் வாயிலாக மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் .வாட்ஸ்அப் தற்போது டிஜிட்டல் முறையில் வாங்கப்பட்ட தங்கத்தை மெசேஜ் வாயிலாக அனுப்பக் கூடிய வசதியை உருவாக்கியுள்ளது. சேப் கோல்டின் கீழ் வாங்கப்படும் தங்கம் அனைத்தும் 99.99 சதவீத தூய தங்கம். இத்தளத்தில் வருடத்தின் 365 நாட்களும், வாரத்தில் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் தங்கத்தை வாங்கவும், விற்கவும் முடியும் .
சேப் கோல்டு - வாட்ஸ்அப் இணைப்பை எப்படிச் செய்வது? . கிப்ட் கோல்டு
* SafeGold தளத்தில் கணக்கைத் திறந்து லாக்இன் செய்ய வேண்டும்.
* ஏற்கனவே இத்தளத்தில் தங்கத்தை வாங்கியிருந்தால் அடுத்து வரும் வழிமுறையை அப்படியே தொடர வேண்டும், இல்லையெனில் தங்கத்தை வாங்கி அதன் பின் அடுத்து வரும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
SafeGold தளத்தில் டேஷ்போர்டில் கிப்ட் கோல்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்தப் பக்கத்தில் தங்கத்தை டிஜிட்டல் முறையில் அனுப்ப விரும்பிய நபரின் மொபைல் எண்-ஐ பதிவு செய்ய வேண்டும். அத்துடன் வாழ்த்துக்களையும் அனுப்பலாம்.இப்படி அனுப்பிய தங்கத்தை மறுமுனையில் இருப்பவர் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும் வெப் லிங்க்-ஐ கிளிக் செய்து அவரது சேப் கோல்டு கணக்கில் பெறலாம். இந்த இணைப்பை வாட்ஸ்அப் வாயிலாகக் கூட அனுப்பலாம். இந்த இணைப்பு சில காலம் வரை மட்டுமே இயங்கும் .
சேப் கோல்டு கணக்கு இல்லாதவர்கள் OTP பாதுகாப்பு கொண்ட வெப் லிங்க்-ஐ பெற்று அதன் மூலம் தங்கத்தை தங்களது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.