சர்ச்சையை கிளப்பிய நாச்சியார் பட டீஸர்
நீண்ட இடைவேளைக்கு பின் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஜோதிகா. அப்படத்தை தொடர்ந்து 'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் நடித்து மீண்டும் தன்னுடைய திரையுல மார்க்கெட்டை உயர்திக்கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜோதிகாவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாச்சியார் என்ற பெயரில் படம் தயாராகி வருவதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது வசனமே இல்லாமல் தொடரும் இப்படத்தின் டீசரில் இறுதியாக ஒரே வரி வசனத்தை மட்டும் ஜோதிகா பேசுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வசனம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது, ஜோதிகா எப்படி அந்த வசனத்தை பேசலாம் என்றும் பாலா எப்படி அந்த வசனத்தை எப்படி பதிவு செய்யலாம் என்று கூறி விவாதமே கிளம்பியுள்ளது.