`நீ ஒரு தீவிரவாதி!- இஸ்ரேல் பிரதமரை தூற்றும் துருக்கி அதிபர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேன்யாஹூவை, `தீவிரவாதி’ என்று தூற்றியுள்ளார் துருக்கியின் அதிபர் தயீப் எர்டோகன்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நடந்த வரும் போர் என்பது பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வரும் கதை. ஒரு காலத்தில் சிறுபான்மையினமாக இருந்த இஸ்ரேலின் யூதர்கள், தற்போது ஒரு பெரும் நிலப்பரப்பை தங்களின் ஆளுகைக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஆனால், நிலத்துக்கு சொந்தக்காரர்களாக இருந்த பாலஸ்தீனர்கள் அகதிகளாக மாற்றப்பட்டு உள்ளனர். சொந்த நாட்டை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் பாலஸ்தீனமும், இருக்கும் நிலப்பரப்பை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பில் இஸ்ரேலும் மல்லுக்கட்டி வருகின்றன.
இதனால், இரு நாட்டுக்கும் இடையில் போர் ஓய்ந்தபாடில்லை. இது ஒரு புறமிருக்க துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ பற்றி, `நேதன்யஹூ, நீ ஒரு வந்தேறி. அதே நேரத்தில் நீ ஒரு தீவிரவாதி’ என்று கடுமையான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு, பக்கத்தில் இருக்கும் முஸ்லீம் நாடுகள் உட்பட பல நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் போதும் இஸ்ரேலுக்கு, அமெரிக்காவின் ஏகோபித்த ஆதரவு இருப்பதால் வல்லரசாக திகழ்ந்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com