பதவியே போச்சு இனி மாநாடு எதுக்கு? ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாமல் கோல்ப் விளையாடும் டிரம்ப்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோல்ப் விளையாடி பொழுதை போக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல நாட்களாக இழுபறியில் இருந்து வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் கடைசியாக அறிவிக்கப்பட்டது. அதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனாலும் அதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று டிரம்ப் கூறி வந்தார். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜோ பைடன் அடுத்த அமெரிக்க அதிபராவது உறுதி செய்யப்பட்டு விட்டது. அடுத்த வருடம் இவர் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் ஜி 20 உச்சிமாநாடு நேற்று சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. சவுதி அரேபியா மன்னர் சல்மான் ராஜா இந்த மாநாட்டை நேற்று மாலை தொடங்கி வைத்து பேசினார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட 24க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் ஆன்லைனில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என முன்னர் அறிக்கப்பட்டிருந்தது. அதிபர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன்பாக டிரம்ப் கலந்து கொள்ளும் கடைசி மாநாடு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.

அவர் அமெரிக்காவில் ஸ்டெர்லிங் பகுதியில் உள்ள தேசிய கோல்ப் மைதானத்தில் அவர் கோல்ப் விளையாடும் புகைப்படங்களை சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. இதன் பிறகு தான் ஜி 20 உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்தது. சமூக இணையதளங்களிலும் டிரம்ப் கோல்ப் விளையாடும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

More News >>