கடற்கரையில் ஆவி பறக்கும் சூடான மிளகாய் பஜ்ஜி ரெசிபி..! இனி வீட்டுலே செய்யலாம்..

பஜ்ஜியை ஸ்நாக்ஸ் நேரங்களில் டீயுடன் சேர்த்து சாப்பிட அனைவரும் விரும்புவோம். கடற்கரைக்கு சென்றால் நம் மனம் பஜ்ஜியை தேடியே சுற்றி கொண்டிருக்கும். சல சல அலைகளின் சத்தத்தோடு சூடான மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். கடற்கரையில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜியை இனி வீட்டிலே சுவையாக சமைக்கலாம்..

தேவையான பொருள்கள்:-கொண்டைக்கடலை -1 கப் பச்சை மிளகாய் -8அரிசி மாவு -1 கப் எண்ணெய் - தேவையான அளவு சீரகம் - 1ஸ்பூன் மிளகாய் பொடி- 1 ஸ்பூன் உப்பு -தேவையான அளவுமஞ்சள் -தேவையான அளவுபெருங்காயம் -தேவையான அளவு

செய்முறை:-ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். மாவில் தேவையான அளவு எணணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு போல் கலக்கி கொள்ளவும்.

பஜ்ஜிக்கு தேவையான மிளகாவை எடுத்து நடுவில் கீறி சிறிது மிளகாய் தூளை உள்ளே தடவி கொண்டு ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் மசாலா தடவி ஊறவைத்த மிளகாயை பஜ்ஜி மாவில் இரண்டு பக்கமும் நன்றாக தோய்த்து எண்ணெயில் போட வேண்டும். பொன்னிறமாக மாறியவுடன் டீயுடன் சேர்த்து சாப்பிட்டால் கலக்கலாக இருக்கும்..

More News >>