சட்டசபை தேர்தலுக்குள் ரஜினி சார் படம் - கார்த்திக் சுப்புராஜ்
அடுத்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். என் பட வேலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அவரது மெர்குரி விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரஜினிகாந்த் அவர்களை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள கார்த்திக் சுப்புராஜ், “என் குடும்பத்தை சேர்ந்த யாரும் சினிமா துறையில் இல்லை. படம் இயக்க வேண்டும் என்ற பேரார்வம் எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் என்பதால் வேலையை விட முடியவில்லை. அதனால் குறும்படம் எடுத்தேன். தற்போது வரை 4 படங்கள், சில குறும்படங்கள் எடுத்துள்ளேன்.
குறும்படத்திற்கு கிடைத்த பாராட்டால் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு நான் இயக்குனர் ஆனேன். நடிப்பு ரஜினி சார் ஒவ்வொரு முறையும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். ரஜினி சாருடனான படத்தை துவங்க மிகவும் ஆவலாக உள்ளேன். அவருடன் வேலை பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது.
அடுத்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். என் பட வேலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும். ரஜினி சாருடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. அவரை இயக்க நான் பயப்படவில்லை. அதே சமயம் நம்பிக்கையுடனும் இல்லை. ஆனால் சிறப்பான படத்தை கொடுப்பேன்” என்றார் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com