`நானும் கெத்து காட்டுவேன்!- கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பன்ச்
ஐபிஎல் அணிகளின் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடரஸின் கேப்டன் தினேஷ் கார்த்திக், `நானும் கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் செல்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பல ஐபிஎல் அணிகளில் விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேனாக இருந்த தினேஷ் கார்த்திக்கை, இந்த முறை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. மேலும், அவரை அந்த அணியின் கேப்டனாகவும் நியமித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. தமிழ்நாட்டு அணிக்கு கேப்டனாக இருந்த போதும், ஐபிஎல் –ல் எந்த அணிக்கும் தலைமை பொறுப்பு வகித்தாவராக இருந்தவர் தினேஷ்.
இருந்தாலும், இந்தப் புதிய பொறுப்பை அவர் செவ்வென செய்வார் என்பது அவரின் உற்சாகத்தில் தெரிகிறது. புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் தினேஷ், `கௌதம் காம்பீர், கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து சாதித்தது மெச்சத்தகுந்தது.
அதே நேரத்தில், நானும் அவரைப் போல பல வெற்றிகளை குவிப்பேன். ஒரு கேப்டனாக என் மீது அழுத்தம் இருப்பது உண்மைதான். ஆனால், அதை சமாளிக்கும் திறமை என்னிடம் இருக்கிறது. மேலும், என் கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கிருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி என் திறமையையும் அணியின் திறமையையும் ஒருசேர வெளிக்கொணர்வேன்’ என்றுள்ளார் நம்பிக்கையுடன்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com