தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் தொழிலாளர் திறன் பயிற்சி!

பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், நிட்டிங் மெஷின், சாப்ட்புளோ டையிங் மெஷின் ஆபரேட்டர் உயர் பயிற்சி பெற, திறன் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி, ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்த மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களில், தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நிதி மேம்பாட்டு கழகத்துடன், திறன் மேம்பாட்டு மையம் இணைந்து, கடந்த 2018 ல், ஏற்கனவே பணியில் உள்ள தொழிலாளர் 200 பேருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, வரும் டிச மாதம் உயர் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேல் பயிற்சி துவங்க உள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்களில் 80 பேருக்கு சர்க்குலர் நிட்டிங் மெஷின் அபரேட்டர், 40 பேருக்கு, சாப்ட்புளோ டையிங் மெஷின் ஆபரேட்டர் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மொத்தம், 80 மணி நேர பயிற்சி முடிப்போருக்கு, திறன் அங்கீகார சான்று வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில், தலா 2,500 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும், 18 முதல் 45 வயது வரையிலான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் கல்வித்தகுதி உள்ளோர் இணையலாம். விருப்பமுள்ளவர், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி சான்று, பள்ளி மாற்று சான்று, வருமான வரி சான்று, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், டிச., 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 99442 97919, 82204 34111 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

More News >>