சாம்சங் போன்களுக்கு அதிரடி விலைச் சலுகை!
சாம்சங் நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மட்டும் சிறப்பு விலை குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவில் சாம்சங் ஸ்மாட்போன்களிலேயே பிரபலமான மாடல்களாகக் கருதப்படுபவை சாம்சங் கேல்க்ஷி எஸ் 8 மற்றும் 8+ போன்கள். இந்த ஸ்மார்ட்போன்களின் விலையை இந்தியச் சந்தையில் மட்டும் குறைப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது.
மேலும் விரைவில் இந்திய ஸ்மார்ட்போன் உலகில் சாம்சங் எஸ்9 மற்றும் எஸ்9+ ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்ய உள்ளதாக சாம்சங் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சாம்சங் கேல்க்ஷி எஸ் 8 49,990 ரூபாய் என்றும் எஸ் 8+ 53,990 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகைகளாக ஆன்லைன் மற்றும் ஷோரூம்களில் சாம்சங் கேலக்ஷி எஸ்8+ ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 10,000 ரூபாய் பேட்டிஎம் கேஷ்பேக் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.