நாங்க பாக்காத காவல் துறையா? உதயநிதி பேச்சு வைரலாகும் வீடியோ

பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரியின் பெயரை குறிப்பிட்டு இன்னும் 5 மாதம் தான் இருக்கிறது. நாங்க பார்க்காத காவல்துறையா? என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அது குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த நவம்பர் 21 அன்று மீனவர்கள் அழைப்பு விடுத்ததாக கண் கூறி உதயநிதி நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பட்டி என்ற ஊரில் பிரச்சாரம் செய்யச் சென்றார். ஆனால் பிரச்சாரத்துக்கு முன் அனுமதி எதுவும் பெறாததால் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் உதயநிதியை வழியிலேயே தடுத்து நிறுத்தினார்.பிரச்சாரத்துக்கு உரிய அனுமதி பெறாத நிலையில் உங்களை அனுமதித்தால் கூட்டம் கூடும் என்றும் பின்னர் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் டி.ஜி.பி சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து காவல் துறையினருக்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் இடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் உதயநிதி, கே.என்.நேரு உள்ளிட்ட சிலரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விட்டு சிறிது நேரத்துக்குப் பின் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து ஒரு கூட்டத்தில் பேசிய உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி அரசு தான் இதை செய்கிறது இந்த அடிமை அரசு தான். ஆனால் இதெல்லாம் செய்றவர் ஒருத்தர் இருக்காரு. ஸ்பெஷல் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ். பேரெல்லாம் நாங்க ஞாபகம் வெச்சுப்போம். இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு. எங்களுக்கு தெரியாத காவல் துறையா? நாங்க பாக்காத காவல் துறையா?" என்று பேசி இருக்கிறார். விதிகளை மீறி கூட்டம் கூட்டிய தன்னை எச்சரித்து கைது செய்ததற்காக ஒரு காவல் துறை உயர் அதிகாரியையே எச்சரிக்கும் விதமாக உதயநிதி மேடையில் பேசிய இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருது.

More News >>