குழந்தைகளுக்கு பிடிச்சா மாதிரி காளான் மிளகு வறுவல் செய்வது எப்படி??
காளான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் கலந்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. காளானை எப்படி கொடுத்தாலும் உடனே சாப்பிட்டு முடித்து விடுவார்கள். சரி வாங்க காளான் மிளகு வறுவலை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-காளான் - 200 கிராம்வெங்காயம் - 2பச்சை மிளகாய் -2தக்காளி - 2இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு மல்லித்தூள் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் - 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் -தேவையான அளவு மிளகுத்தூள் -2 ஸ்பூன் சோம்பு -1 ஸ்பூன் க.எண்ணெய் -தேவையான அளவு உப்பு - தேவையான அளவு.
செய்முறை:-முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு சேர்த்து பொரித்து கொள்ளவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் காளான் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து காளான் நன்றாக வதங்க சிறிது நீரை தெளித்து விடவும். கடைசியில் அடுப்பில் இருந்து காளானை இறக்கும் பொழுது 2 ஸ்பூன் மிளகு தூள் தூவி இறக்கவும். சுவையான காளான் மிளகு வறுவல் தயார்.