60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா. இப்படத்தில் இவரது உடற்தோற்றத்தை கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை எனலாம். உருண்டு திரண்ட கட்டுமஸ்தான தேகம். அப்படத்தில் நடித்த பிரபாஸ் தோற்றத்தை விட ராணாவின் தோற்றம் பேசப்பட்டது. கடந்த ஆண்டு ராணா உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரது கிட்னி (சிறுநீரகம்) பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவரை அமெரிக்கா அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அவரது தாயார் தனது ஒரு சிறுநீரகத்தை வழங்கி ராணா உயிரைக் காப்பாற்றினார் என்று கூறப்பட்டது.
இதில் ராணா உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆகிப்போனார். இந்த தோற்றத்தில் வெளியான அவரது புகைப்படம் ரசிகர்களை கலங்க வைத்தது.இந்நிலையில் ராணா தெலுங்கு டிவி ஷோ ஒன்றில் பங்கேற்றார் ராணா. இதனை சமந்தா நடத்தினார். அதில் ராணாவிடம் கடந்து ஆண்டு சந்தித்த உடல் பாதிப்பு பற்றி சமந்தா கேள்வி எழுப்பினார். அதற்கு ராணா கண்ணீர் மல்கப் பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:கடந்த ஆண்டு என் வாழ்க்கை வேகமாகச் சென்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று வாழ்க்கை நின்றுபோனது போன்ற ஒரு காலகட்டம் ஏற்பட்டது. எனக்கு சிறுவயது முதலே ரத்த அழுத்தம் உள்ளது. என் இதயத்தைச் சுற்றி ஒரு பாரம் இருந்தது. இதனால் கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலை நீடித்தால் 60 சதவீதம் பக்கவாதம் வரவும், 30 சதவீதம் மரணம் ஏற்படவும் ஆபத்து இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். அந்த தகுந்த சிகிச்சை பெற்று மீண்டு வந்தேன் என்று கண்ணீர் மல்க உருக்கமாகக் கூறினார். அதைக்கேட்டு சமந்தாவும் கண்ணீர் சிந்தினார். பிறகு மிஹீகாவுடன் தனது திருமண வாழ்க்கை பற்றிய மகிழ்ச்சியையும் பகிர்ந்துக்கொண்டார் ராணா. சமந்தா நிகழ்ச்சியில் ராணவுடன் இயக்குனர் நாக் அஸ்வின் கலந்து கொண்டார்.