மாரடைப்பை முன்கூட்டியே அறியும் கருவி... சிறுவனுக்கு தேசிய விருது
மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் சிறிய கருவியைக் கண்டுபிடித்து தமிழக சிறுவனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் ஆகாஷ். இவர் மாரடைப்பை முன்கூட்டியே அறியும் சிறிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
அந்த கருவியை கையில் கட்டிக்கொண்டால், சுமார் 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே மாரடைப்பு வரப்போவதை உணர்த்தும் என கூறப்படுகிறது.
இந்தச் சாதனையைப் புரிந்துள்ள சிறுவன் ஆகாசுக்கு, குழந்தைகள் தினத்தன்று தேசிய விருது வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.
இந்நிலையில், விருதுதை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சிறுவனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.