ரஜினி இயக்குனருக்கு விஜய்யை இயக்க ஆசை..
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் படங்களை இயக்க எல்லா இயக்குனர்களுக்கும் ஆசை உள்ளது ஆனால் சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு போய் சேர்கிறது. ரஜினி நடித்த மன்னன் சந்திரமுகி போன்ற படங்களை இயக்கியவர் பி.வாசு. இவருக்கு விஜய் படத்தை இயக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இன்னும் அந்த வாய்ப்பு அமையவில்லை.சத்யாராஜ்-குஷ்பு நடித்த படம் நடிகன். இப்படத்தை பி.வாசு இயக்கினார். இப்படத்தின் ரீமேக்கில் விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என்று பி.வாசு தனது ஆசையை வெளிப்படுத்தினார். இதுபற்றி அவர் கூறியதாவது: நடிகன் படத்தை ரீ மேக் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. சத்யராஜ் வேடத்தில் விஜய் நடித்தால் பொருத்தமாக இருக்கும். சத்யராஜ் போலவே விஜய்க்கும் காமெடி நன்கு வரும். அவருக்கு இந்த கதாப்பாத்திரம் பொருத்தமாக இருக்கும் என்றார்.
விஜய்யை பொறுத்த வரை சமீபகாலமாக அவர் ரீ மேக் படங்களில் நடிக்கவில்லை கடைசியாக ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தின் ரீமேக்கில் நடித்தார். இப்படம் இந்தியில் அமீர்கான் நடித்த 3 இடியட் படத்தின் ரீமேக் ஆகும். பி.வாசு தமிழ் தவிர கன்னடம் , மலையாளம், தெலுங்கு படங்களையும் இயக்கி உள்ளார். அடுத்து சந்திரமுகி 2ம் பாகம் இயக்க உள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இப்படம் பெரிய ஹிட் படமாக அமைந்தது. 2ம் பாகத்தில் ரஜினி நடிக்க வாசு ஆசைப்பட்டார் ஆனால் ரஜினி ஏற்கவில்லை. இதையடுத்து ரஜினியின் சம்மதம் பெற்று சந்திரமுகி 2ம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.