மெகா ஸ்டாரை இயக்கும் கோலிவுட் இயக்குனர்..
மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க உள்ளார் கோலிவுட் பட இயக்குனர். இப்படம் ஒரு மலையாள ரீமேக் ஆகும். மலையாள நடிகர் மோகன்லால் நடித்த படம் லுசிஃபெர். இப்படத்தை நடிகர் பிரித்வி ராஜ் இயக்கினார். இது மலையாளத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க சாஹோ பட இயக்குனர் சுஜீத் இயக்குவதாக திட்டமிருந்தது. பிறகு விவி விநாயக் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. தமிழில் விஜய் நடித்த கத்தி படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டதில் சிரஞ்சீவி நடித்தார். இந்த படத்தை விவி விநாயக்தான் கைதி நம்பர் 150 என்ற பெயரில் இயக்கினார். ஆனால் தற்போது லூசிஃபெர் ரிமேக்கை விநாயக் பதிலாக மோகன்ராஜா இயக்குவார் என்று தெரிகிறது.
சிரஞ்சீவி நடிக்கும் லூசிஃபெர் ரீமேக்கை மோகன்ராஜா இயக்குவார் என்று பேச்சு எழுந்துள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம் தொடங்கி 6 ரீமேக் படங்கள் இயக்கி அவற்றை வெற்றிப்படமாக தந்திருக்கிறார். தனி ஒருவன் படத்தை ஒரிஜினல் ஸ்கிரிபட் தயாரித்து இயக்கி அதையும் வெற்றி படமாக தந்தார். அடுத்து தனி ஒருவன் 2ம் பாகம் இயக்க ஸ்கிரிப்ட் ரெடி செய்திருக்கிறார். முன்னதாக இந்தியில் ஆயுஷ் மான் குரானா நடித்த அந்தாதுஹுன் படத்தை பிரசாந்த் நடிக்க மோகன்ராஜா தம்ழில் ரீமேக் செய்ய ஒப்புக் கொண்டிருந்தார். பிறகு அதிலிருந்து விலகினார். தற்போது அந்தாதஹுன் படத்தை ஜே ஜெ ப்ரட்ரிக் இயக்குகிறார். இவர் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கியவர்.