உடலுக்கு குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய் தோல் துவையல் ரெசிபி..!
உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் மிகவும் முக்கியம். அப்பொழுது நாம் நீண்ட நாள் உயிர் வாழ வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவை தேடி நாம் அலைய வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் காய்கறிகளிலே பல்லாயிர கணக்கான சத்துக்கள் நிரம்பியுள்ளது. அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்று தான் பீர்க்கங்காய். தோல் முதல் உள்ளே இருக்கு காய் வரை சத்துக்களால் ஆனது. அந்த தோலை வைத்து எப்படி சுவையான துவையல் செய்வது என்பதை பார்ப்போம்..
தேவையான பொருள்கள்:-பீர்க்கங்காய் தோல்- 1 கப்காய்ந்த மிளகாய் - 10உ.பருப்பு - 50 கிராம்க.பருப்பு- 50 கிராம்உப்பு- தேவையான அளவுவெங்காயம்- 1தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்புளி- சிறிதளவு,எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:-முதலில் பீர்க்கங்காயில் உள்ள தோல்களை தனியாக சீவி வைத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து உ .பருப்பு, க. பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் பீர்க்கங்காய் தோல், வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
இரண்டு கலவையும் நன்றாக காற்றாட விட்டு பிறகு மிக்சியில் தேவையான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளளவும். பத்தே நிமிடத்தில் சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார். இதனை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி,தோசை என டிபனுடன் சேர்த்து சாப்பிடலாம்.