செம டேஸ்ட்டுன்னு சொல்ல வைக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரியமான முருங்கை மசாலா..!
தமிழ்நாட்டின் சிறப்புகளுள் ஒன்று முருங்கைக்காய். இதில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சரி வாங்க சிம்பிளான ஸ்டைலில் முருங்கை மசாலா செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-முருங்கைக்காய் - 4சின்ன வெங்காயம் - 10பச்சைமிளகாய் - 2தக்காளி - 1மிளகாய் பொடி - 1 ஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-முதலில் முருங்கைக்காயை துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய முருங்கைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு ஆகியவை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.
சின்ன வெங்காயம் சேர்ப்பதால் முருங்கை மசாலா சுவையாக இருக்க உதவும். கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் 20 நிமிடத்தில் சுவையான காரசாரமான முருங்கை மசாலா தயார்..