நயன்தாராவுக்கு போட்டியாக.. அம்மன் கெட்டப்பில் கலக்கும் ஷாலு ஷம்மு..
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் தான் ஷாலு ஷம்மு.சிவகார்த்திகேயன் நடித்த வருத்த படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழுக்கு எண் ஒன்று அழுத்தவும் என பல திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகைகளுக்கு தோழியாகவும் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும் என பல வித கதாபாத்திரத்தில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்து பிரபலம் ஆகினார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியலிலும் சின்னத்திரை நடிகையாகவும் நடித்துள்ளார். வெள்ளி திரைக்கு வந்த பிறகு கவர்ச்சியை காட்டி பெரிய நடிகையாக ஆகிவிடலாம் என்று நினைத்த ஷாலுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
கவர்ச்சி நிறைந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதே வழக்கமாக வைத்திருந்தார். தற்பொழுது ஒரு புதிய அவதாரமாய் சேலை கட்டி குங்குமம் வைத்து குடும்ப குத்து விளக்காய் அவரது வரலாற்றிலே இடம்பெறாத புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இவரது புதிய அவதாரம் லேடிய சூப்பர் ஸ்டார் நடித்த மூக்குத்தி அம்மன் வேடத்தை காப்பி அடித்தது போல் இருந்ததால் நயன்தாராவின் ரசிகர்கள் ஷாலுவின் மேல் கொலைவெறியில் உள்ளனர். இந்த புகைப்படம் வெளியிட்டது நெட்டிசன்களுக்கு தீணி போட்டது போல் உள்ளது. ஆனால் புதிய வேடத்தில் இருக்கும் ஷாலுவை சில ரசிகர்கள் தலை மேல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.