டிசம்பரில் சசிகலா விடுதலை... முடிவெடுத்த கர்நாடக சிறைத்துறை!

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். வங்கி வரைவோலையை(டிடி )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். இதையடுத்து சசிகலா எப்போது விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பரில் அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா சிறையில் சுமார் 100 விடுமுறை நாட்களை கழித்துள்ளார்.இதுபோக, கன்னடம் கற்றதற்கு 10 நாட்கள் என அவரின் விடுமுறை நாட்கள் மட்டுமே 145 நாட்கள் வரும். இதனை 2021ம் ஆண்டு பிப்ரவரி 14ல் இருந்து கழித்தால் இந்நேரம் விடுதலை ஆகியிருக்க வேண்டும். எனினும் இது காலம் கடந்த முடிவு என்பதால் டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, சசிகலாவை தொடர்ந்து இளவரசி தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று இளவரசியின் தரப்பில் ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான 6 வரைவோலைகளை அவரின் வழக்கறிஞர் அசோகன் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.சிவராமா முன்னிலையில் தாக்கல் செய்தார். நீதிபதி அதனை ஏற்ற நிலையில் இன்று அதை சிறைத்துறை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார்.

More News >>