உலக பணக்காரர்.. பில்கேட்ஸை முந்திய எலான் மஸ்க்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் எலான் மஸ்க்.முதலிடத்தில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப்பின் சொத்து மதிப்பு 182 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்து வருகிறது. அதேபோல், பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் அமரிக்க டாலர்களாகவும், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 128 பில்லியன் டாலர்களாகவும் உயர்ந்துள்ளது. இதனால் இரண்டாவது இடத்தில் வந்துள்ளார் மஸ்க். பேட்டரியால் ஓடும் அவருடைய டெஸ்லா (Tesla) கார் உற்பத்தியை பிரதானமாக கொண்டு தொழில் செய்து வருகிறார் எலான் மஸ்க்.

இதுவரை இவர் நிறுவனம் தயாரித்து கார்களின் எண்ணிக்கை 7,20,000–க்கும் அதிகம் தான் என்றாலும், சமீபத்தில் இந்த டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் விலை சரமாரியாக ஏறியது. இதனால் அவரது சொத்து மதிப்பு 7.2 பில்லியன் டாலர்களில் இருந்து 128 பில்லியன் டாலர்களாக கிடுகிடுவென ஏறியது. தற்போது இந்த இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த தொழிலை தவிர தனது SpaceX நிறுவனத்தின் இலக்கு செவ்வாய் கிரகத்தில் மக்களைக் குடியேற்றம் செய்யும் முயற்சியில் நாசா உடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>