சீனாவுக்கு தீவு.. அமீரகத்துக்கு கழுகு... நிதி நிலையால் பாகிஸ்தான் தாராளம்!
பாகிஸ்தான் அரசுக்கும் சவுதி அரேபியாவுக்கும் சமீப காலமாக மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இஸ்ரேல் மற்றும் அரபு அமீரகத்துக்கு இடையேயான உறவை இம்ரான் கடுமையாக விமர்சிக்க பிரச்னை தொடங்கியது. இதனால் கடுப்பாகிய சவுதி அரசு பாகிஸ்தானுக்கு கொடுத்த 2 பில்லியன் டாலர் கடனை திருப்பி கேட்க தொடங்கியுள்ளது. இதனால், இரு நாடுகளுகிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய பணத்தை திருப்பி கொடுக்கும் அளவிற்கு தற்போது பாகிஸ்தானிடம் பொருளாதார நிலை இல்லை என்பதால் பாகிஸ்தான் அரசு தனது சட்ட திட்டங்களை மீறி செயல்படும் நிலைமைக்கு தள்ளபட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானின் நிதி நிலை பற்றாக்குறையால் பாகிஸ்தான் நாட்டின் இரு தீவுகளான புண்டல் மற்றும் புடோவை சீனாவிற்கு கொடுத்த பாகிஸ்தான் தற்போது அதேபோல் ஒரு பரிசை அமீரகத்துக்கு கொடுத்துள்ளது.
சுமார் 150 அரிய வகை, கழுகுகளை அமீரகத்துக்கு கொடுத்துள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தானில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் படி அரிய கழுகுகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு இருந்தது. இருப்பினும் அமீரகத்துக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக தனது நாட்டு விதிகளை மீறி துபாய் மன்னர், ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு சுமார் 150 அரிய வகை, கழுகுகளை ஏற்றுமதி செய்ய ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார் இம்ரான் கான். அதன்படி தற்போது கழுகுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.