பிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..
எவிக்ஷன் டாப்பிள் கார்ட் விவாத அறை. அனிதா அந்த கார்டை வாங்கிட்டு போய் சம்யுக்தாவை நாமினேட் செய்யறாங்க. ஆக்டிவிட்டி ஏரியால ஜித்து பாய் இன்னும் பயங்கர கோபத்துல இருக்காரு. டாஸ்க் முடிஞ்சு எல்லாரும் வெளிய போக, கார்டை பறிகொடுத்ததை பத்தி சோம் கூட பேசறாங்க நிஷா. தான் ஏமாந்துட்டோம்னு அப்ப தான் புரியுது நிஷாவுக்கு.
ஆனாலும் அதை வெளிய காட்டிக்காம மத்தவங்க மேல பழி போடறாங்க. ரியோவும் உள்ள வந்து நிஷாவை திட்டறாரு. அடுத்து அர்ச்சனா வராங்க. மக்களை பார்த்துட்டு வரல, விட்டுக்கொடுக்கற மனப்பான்மை இல்லைனு சொல்லி சொல்லி காட்றானுகனு, அதை கேட்டுட்டு நான் எப்படி அந்த பாஸ் வாங்க முடியும்னு ஒரே அழுகாச்சி. விட்டுக் கொடுக்கற மனப்பான்மை இல்லைனு சொன்னது பாலா. அதாவது இறுதி கட்டத்துல அனிதா, நிஷா, சனம் மூணு பேர் மட்டும் இருக்கும் போது சொன்னது. 3 பேரும் ஒரு முடிவுக்கு வராம இழுத்துட்டே போனதால யாருக்கும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லை, அதனால நான் யாருக்கும் போடலைனு சொல்றாரு பாலா.
இதுல ஒரு பியூட்டி என்னான்னா அர்ச்சனா குரூப்ல இருக்கற நிஷாவுக்கு போகக் கூடாதுன்னு தான், சனம்க்கு தன்னுடைய ஓட்டை மாத்தறாரு பாலா. சனம்க்கு ஏற்கனவே ஆரி சப்போர்ட். நிஷாவுக்கு ரமேஷ் & சோம். சோ 2-2 னு இருக்கு. ஆக்சுவலா அப்பவே அனிதா அவுட். அப்ப அனிதா என்ன பண்றாங்கன்னா தன்னுடைய ஓட்டையும் நிஷாவுக்கு போடறாங்க. சோ 3-2 னு நிஷா ஜெயிச்சாச்சு. ஆனா தேவையே இல்லாம பிடிவாதம் பிடிச்சு அந்த கார்டை அனிதாவுக்கு தாரை வார்த்துட்டாங்க நிஷா.
இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கு. ஆரி கேப்டன் ஆனதுல இருந்து சனம் + அனிதா ரெண்டு பேரும் க்ளோசா இருக்காங்க. ஆரி-அனிதா பிரச்சினை வந்த போதும் சரி, அதில்லாம மூத்த பிரச்சினைலையும் சரி, அனிதாவுக்கு தான் சப்போர்ட் செஞ்சாங்க சனம். ஆரி கிட்ட அனிதாவுக்காக பரிஞ்சு பேசினாங்க. கமல் சார் எபிசோட்ல இந்த வீட்ல யார் இருக்கனும்னு கேட்ட போது அனிதா பேரை சொன்ன ஒரே ஆள் சனம் மட்டும் தான். ஆனா அனிதாவோட எண்ணம் சனமை தோழியா பார்க்கலை. தனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவால்ல எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போகனும்னு நினைச்சு தன்னுடைய ஓட்டை நிஷாவுக்கு போட்ருக்காங்க. கூடவே இருந்து குழிபறிக்கறதுங்கறது இதுதான்.
அனிதா இதுவரைக்கும் சம்யுக்தாவை நாமினேட் செஞ்சதே இல்லை. ஆனா இப்ப புதுசா ஒரு குற்றச்சாட்டு சொல்லி சாம் பேரை சொல்லிருக்காங்க. அதுக்கான காரணமும் கமல் சார் எபிசோட்ல நடந்த விஷயம் தான். இந்த வீட்ல யார் இருக்கனும்னு கேட்ட கேள்விக்கு சனம், அனிதா, ஆரி தவிர எல்லாரும் சம்யுக்தா பேரை சொல்றாங்க. சோ தன்னை விட இன்னொருத்தருக்கு முக்கியத்துவம் இருக்குங்கறதை அனிதாவால ஏத்துக்க முடியல. தனக்கு சப்போர்ட்டா இருக்கற ஒருத்தருக்கே ஒரு லைப் கொடுக்க மனசில்லாத அனிதா, எதிரியா பிக்ஸ் செஞ்சுகிட்ட சாமை விட்ருவாங்களா என்ன? அதனால தான் கிடைச்ச வாய்ப்புல சம்யுக்தாவை கட்டம் கட்டிட்டாங்க.
அனிதாவும் பாலாவும் தனியா பேசறாங்க. சனம் அனிதா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுக்கனும்னு தான் நான் எதிர்பார்த்தேன். அது உண்மை தான். அவர் முதல்ல அனிதாவுக்கு ஓட்டு போட்டாரு, அப்புறம் சனம்க்கு மாத்திட்டாரு. நிஷாவுக்கு போகக்கூடாதுனு தான் பாலாவோட இண்டன்ஷன். சனம்க்கு ஏன் கொடுக்கலனு கேட்டதுக்கு அனிதா கொடுத்த விளக்கம் இருக்கே.. அப்பப்பா... சுத்தி சுத்தி பேசியே எதிராளியை குழப்பறதுல அனிதா ஒரு ஆரி.
"நான் என்னை காப்பாதிக்கனும் முதல்ல... நான் இங்க இருந்தா தான் இவங்களை (வச்சு)செய்ய முடியும். பதில் சொல்ல முடியும். நான் சம்யுக்தாவை நாமினேட் செஞ்சேன். சனம் வந்து சாம், ஷிவானி, அர்ச்சனா 3 பேரை நாமினேட் செஞ்சாங்க. நிஷா வந்து ஆஜித்தை நாமினேட் செஞ்சாங்க. அப்ப நிஷாவுக்கு கிடைச்சா ஆஜித் நாமினேட் ஆகிருவான். எனக்கு சம்யுக்தா நாமினேட் ஆகனும்னு எதிர்பார்த்தேன். புரியுதா உனக்குனு" கேட்டு பாலாவுக்கு புரியலனு உறுதிபடுத்திகிட்டாங்க அனிதா.
சம்யுக்தா நாமினேட் ஆகனும்னா என்ன செஞ்சுருக்கனும், சனம்க்கு தானே ஓட்டு போட்ருக்கனும். அப்புறம் ஏன் நிஷாவுக்கு தன்னோட ஓட்டை போட்டாங்களாம். ஆக........
இதுக்கு முன்னாடி ஆக்டிவிட்டி ஏரியால அர்ச்சனா & கோ நடந்துகிட்டதை பத்தி சொல்லனும். அந்த டாஸ்க்ல நடந்ததெல்லாம் மொத்தமா வீட்டுக்குள்ள இருக்கற டிவில போட்டாங்க. அவ்வளவு நேரம் உக்காந்து பார்த்துட்டு வந்து, ஒன்னுமே தெரியாத மாதிரி நிஷா கிட்ட கேட்டு குதிக்கறாங்க. அப்பவும் நிஷா மேல தான் தப்புனு ரியோ தெளிவா சொல்றான். அர்ச்சனா கேட்டா தானே. தன்னோட முட்டாள்தனத்தை மறைக்க அடுத்தவங்க மேல பழி போட்டு தப்பிச்சுகிட்டாங்க நிஷா....
தன்னுடைய தாய்மையை பத்தி ஆரி தவறா பேசிட்டதா அர்ச்சனா கிட்ட கண்கலங்கறாங்க சாம். இந்த மேட்டரை பின்னாடி பார்ப்போம்.
அன்சீன்ல நடந்த ஒரு மீட்டிங் பத்தி சொல்லனும். ஆரி, அனிதா, சனம் 3 பேரும் பேசிக்கிறாங்க. இது குரூப்பிசம் கிடையாது.. நம்புங்க. நிஷா சோகமா இருக்கறதுக்கு அந்த கார்டை நாம வாங்கினது தான் காரணம்னு நினைச்சு அனிதா வருத்தப்படறாங்க. அட ஆமாப்பா..... கேமரா கிட்ட கூட அந்த பாசை திருப்பி நிஷா கிட்ட கொடுத்துடுங்க பிக்பாஸ்னு கேட்டுகிட்டாங்க. நடந்தது என்னன்னு தெரியாம அனிதாவுக்கு ஆறுதல் சொல்றாங்க சனம்.
அப்ப தான் விட்டு கொடுத்த மேட்டரல சில விஷயங்களை சொல்றாரு ஆரி. அவர் போட்டில இருக்கும் போது நடுவுல அவருக்கு ஒரு சிந்தனை வந்துருக்கு. சாம், கேப்பி மத்தவங்களை பத்தி அவங்க ட்ரூ கலர் பத்தி நமக்கு தெரியும். இந்த ரியொ யார்? அவன் இண்டன்ஷன் என்ன? அவன் யாரை எதிரியா நினைக்கிறான்? இப்படி எதுவுமே தெரியல. சொ. அவனுக்கு இந்த தடவை கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்து, அவன் எப்படி நடந்துக்கறான்னு பார்த்து கண்டுபிடிக்கனும்னு முடிவு செய்யறாரு. அதாவது கேமுக்கு நடுவுல நடந்ததா ஆரி ச்ன்ன விஷயம் அது. கேம்ல இந்த கோட்ல இருந்து அந்த கோட்டுக்கு போகும் போது வேகமா போனார் இல்லையா? அந்த மொமண்ட் தான் அவர் கேப்டன்சியை விட்டுக் கொடுக்க முடிவு செஞ்ச ம்மண்ட். இதுவும் ஆரியே சொன்னது தான். இது அவர் மனசுல நினைச்ச ரு விஷயமா இருந்ததால யார்கிட்டயும் ப்ரூப் செய்ய முடியாதுனு சொல்றாரு.
அதே மாதிரி ரியோ கிட்ட பேசின விஷயமும். கேப்டன்சி டாஸ்க் முடிஞ்சதுக்கு அப்புறம் ரியோவும் ஆரியும் பேசினதை பத்தி ரியோவோட வெர்ஷன் நாம கேட்டோம். ஆரியோட வெர்ஷன் நேத்து அவரே சொல்றாரு. டாஸ்க் முடிஞ்சதும் "ஏன் ப்ரோ விட்டுட்டீங்க" னு ரியோ கேட்ருக்காரு. அதுக்கு ஆரி வெறுமனே சிரிச்சுருக்காரு. "நான் உங்களை விளையாடி ஜெயிக்கனும்னு நினைச்சேன் ப்ரோ" னு ரியோ சொல்லிருக்காரு. அதுக்கு ஆரி சிரிச்சுட்டே அவர் தோள் மேல கை போட்டு கூட்டிட்டு போய் ஒரு இடத்தை காமிச்சு, "அங்க என்ன பேசினோம்னு நினைவிருக்கா, அதுக்குத்தான்" னு சொல்லிருக்காரு. ஆரியும், ரியோவும் ஏதோ பேசிருக்காங்க. அது நமக்கு காண்பிக்கப்படலை.
விட்டு கொடுத்தேன்னு ஆரி சொன்ன விஷயத்துல ரியோ பம்மி பதுங்கினது இப்ப நமக்கு கேள்வியா வருது. ஆரியை டிபெண்ட் செய்ய ரியோ ஏன் வரலைனு சனம் கேட்ட கேள்வி நியாயமானது.
நாள் 52
சென்னை சிட்டி கேங்ஸ்டர் பாடலுடன் தொடங்கியது நாள்.
இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் "வொய் ப்ளட் சேம் ப்ளட்". இந்த வீடு ஒரு பிக்பாஸ் கால் சென்டரா மாறப்போகுது. ஒரு அணி கஸ்டமர் கேர் டீமாகவும், இன்னொரு அணி வாடிக்கையாளராகவும் மாறனும். வாடிக்கையாளர்கள் கஸ்டமர் கேர் அணிக்கு போன் போட்டு என்ன கேள்வி வேணும்னாலும் கேக்கலாம். அதுக்கு கஸ்டமர் கேர்ல இருக்கறவங்க பொறுமையா பதில் சொல்ல்ணும். வாடிக்கையாளர் கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம போனை வச்சுட்டா அவங்க அவுட். பஸ்ஸர் அடிக்கற வரைக்கும் பதில் சொல்லிட்டா வாடிக்கையாளர் அவுட். இந்த டாஸ்க்ல அவுட் ஆனவங்க அடுத்த வாரம் நாமினேஷனுக்கு நேரடியா நாமினேட் செய்யப்படுவார்கள். அது மட்டும் இல்லாம " நான் நாமினேட் செய்யப்பட்டேன்" அப்படிங்கற போர்டை கழுத்துல மாட்டிக்கனும். பேசி முடிச்சதுக்கு அப்புறம் திரும்பவும் வாடிக்கையாளரை கூப்பிட்டு ஸ்டார் ரேட்டிங் கேட்டு வாங்கனும். செம்ம வில்லங்கமான டாஸ்க் இது.
முதல் காலர் அர்ச்சனா,கஸ்டமர் கேர் பாலா. அம்மா, அன்புனு சொல்லி என்னை மைண்ட் ப்ளாக் பண்ணிட்டாங்கனு பாலா ஏற்கனவே நாமினேஷன்ல சொல்லிருந்த விஷயத்துல ஆரம்பிச்சு, அன்பு, அன்பு, அன்பு,, அன்புனு 1008 தடவை சொல்லி முடிச்சாங்க. ரொம்பவுமே இண்டன்ஸான ஒரு விவாதம் அது. டாஸ்க்னு வரும் போது அர்ச்சனா உண்மையிலேயே வேற லெவல் தான். பாலாவும் சிரிச்சுட்டே பதில் சொல்லிட்டு தான் இருந்தான். மேக்சிமம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்ட்டான். அவன் கையில ஏதோ பொண்ணோட பேர் இருக்கு அதை கேமரா முன்னாடி காமிக்கனும் சொன்ன விஷயம் மட்டும் அர்ச்சனாவோட ஸ்லிப் மொமண்ட்.
கால் பேசி முடிச்சு வீட்டுக்குள்ள போன உடனே வீடே சந்தைக்கடை மாதிரி ஆகிடுச்சு. யார் என்ன பேசறாங்கன்னே புரியல. சோம், ரியோ, கேப்பி 3 பேரை வச்சு அர்ச்சனா விளையாடினதா பாலா சொன்னதுக்கு விளக்கம் கேட்டு எல்லாரும் ஒரே நேரத்துல பேசிட்டு இருந்தாங்க. ஆக்சுவலா கேப்பி கேட்ட ஒரு கேள்வி நியாயமான கேள்வி. எந்த இடத்துல அர்ச்சனா வந்து எனக்காக விளையாடினாங்க? கேப்பி கேட்ட கேள்வி நியாயமானது. அதை மட்டும் கேட்டு நிதானமா பேசிருந்தா விவாதம் வளர்ந்துருக்கும். ஆனா பாலாவை பத்தி மனசுல இருந்த எல்லா கேள்வியையும் ஒரே நேரத்துல கேக்கனும் அவசரப்பட்டது தப்பா போச்சு. ஷிவானி கிட்ட குழந்தைங்கனு சொன்ன விஷயம், ஆஜித் கேப்டன்சி பத்தி பேசின எந்த விஷயமும் கேப்பியோட ரிலேட் ஆகல.
அதே மாதிரி எடுத்த உடனே ஹீட்டட் ஆர்கியுமெண்ட் செய்ய வேண்டிய அவசியம் என்னன்னு தான் தெரியல. பாலாவும், கேப்பியும் ப்ரெண்ட்ஸ். ஆரம்ப வாரங்கள்ல எப்பவும் அவன் கூடத்தான் இருப்பாங்க. நடுவுல ஒரு சின்ன கேப். பாலாவை தனியா கூப்பிட்டு பேசிருக்கலாம். அவன் விளக்கம் திருப்தி இல்லேன்னா அப்ப சண்டை போட்ருக்கலாம். அர்ச்சனா ஆர்கியூ பண்றாங்கன்னா, அவங்களுக்கு உள்ள இந்த விஷயம் பல தடவை பேசியாச்சு. நேத்து நேரடியா அர்ச்சனா பேரை சொல்லி நாமினேட் செஞ்சதால அவங்க கோபபடறாங்க. ஆனா நேத்து கேப்பி கோபப்பட வேண்டிய அவசியமே இல்லை.
இதுக்கு நடுவுல "டோண்ட் கால் மீ அக்கா, ஐயாம் அர்ச்சனா, ஜஸ்ட் அர்ச்சனா " னு கை நீட்டி அர்ச்சனா சொன்னது நேத்தே மீம் டெம்ப்ளேட் ஆகிடுச்சு.
அடுத்த காலர் சனம். வாடிக்கையாளர் சம்யுக்தா. முந்தின நாள் சாம்-சனம் ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது "நீங்க அழகா இருக்கீங்க, ஆனா வாயை திறந்தா கலீஜ்" அப்படினு சம்யுக்தா சனம் கிட்ட சொல்லிருக்காங்க. அவங்க எதை குறிப்பிட்டு அப்படி பேசினாங்கனு நமக்கு தெளிவா தெரியல. அதுல இருந்து தான் ஆரம்பிக்கறாங்க சனம். ஒருவேளை அந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாம கூட லேட்டா கேட்ருக்கலாம். இதுக்கு முன்னாடியும் சனம் அப்படி பண்ணிருக்காங்க. ஆனா அடுத்து அவங்க பேசின விஷயம் தான் பிரச்சினை. சாம் கேப்டன் ஆனது தப்பு, தகுதியே இல்லைனு மறுபடியும் பழைய பிரச்சினையை கிளறினாங்க.
அந்த பிரச்சனை பல தடவை பேசப்பட்டு நிறைய விளக்கம் கொடுத்தாச்சு. அதுக்கப்புறம் 3 கேப்டன் வந்துட்டாங்க. ஆனாலும் அதை விடாம பேசறது மூலம் சம்யுக்தாவை இன்னும் கடுப்பேத்தறது மட்டும் தான் ப்ளான் போலருக்கு. ஆனா சாம் பேசும் போது சிரிச்சுட்டே தான் பேசினாங்க. உங்க கேப்டன் பதவி பத்தி குறை சொன்னவங்களை பத்தி என்ன நினைக்கறிங்கனு கேட்டதுக்கு, "அவங்க வளர்ப்பு அப்படி மேடம்" னு சொல்லிட்டாங்க சம்யுக்தா.
ஆக்சுவலா சாம் கேப்டன்சி பத்தி சனம் எந்த கருத்துமே இதுவரைக்கும் சொன்னதில்லை. ஆனா இது டாஸ்க்குக்காக பேசினாங்கனு நம்பலாம்.
பாலாவை போலவே சம்யுக்தா பேசினதும் பிரச்சினையாச்சு. டாஸ்க் முடிச்சு உள்ள போன உடனே "வளர்ப்பு" வார்த்தையை பத்தி ஆரி கேள்வி கேட்டாரு. "நான் பொதுவா தான் சொன்னேன், உங்களை மீன் பண்ணலைனு சாம் சொன்னாலும் அது ஆரியை தான் குறிக்குதுனு எல்லாருக்கும் தெரியும். இந்த வார்த்தைக்கு சம்யுக்தா வருத்தம் தெரிவிக்க வேண்டி வரும்.
இந்த வார்த்தையை பத்தி ஆரி கேக்கும் போது தான் நேத்து சாம் பத்தி ஆரி பேசினதை திருப்பி கேக்கறாங்க. எவிக்ஷன் டாப்பிள் ரவுண்ட்ல ஆரியும் சாம் பேரை தான்னாமினேட் செஞ்சுருக்காரு. ஆனா அதுக்கு சொன்ன ரீசன்ல தான் இந்த சிக்கலே. அதாவது சாம் கேப்டன் ஆன முதல் நாள், அர்ச்சனா டீம் க்ளீனிங் செய்யாம ஹேண்ட் போவர் செஞ்சாங்க இல்லையா, அப்ப ஆரிக்கும் சாம்க்கும் ஒரு சண்டை வந்துது இல்லையா, அப்ப சாம் வந்து ஆரியை பார்த்து Agitate ஆகி பேசறிங்கனு சொன்னாங்களாம். அதுக்கு ஆரி ஒரு உதாரணம் சொல்றாரு. "18 வயசு பையன் ஆஜித், அவன் கிட்ட மெச்சூரிட்டி எதிர்பார்க்கறோம். குழந்தைக்கு தாயாகி அவங்க மெச்சூரிட்டி லெவல் அப்படி இருக்கும் போது, அவர் கடமையை செய்யத்தவறினதை சுட்டி காட்டினதுக்கு, நான் agitate ஆகி பேசறேன், கொந்தளிப்பா பேசறேன்னு சொல்றாங்க. அதாவது எனக்கு 8 பேர் நாமினேட் பண்ணிருக்காங்கனு நான் கொந்தளிப்பா பேசறதா சொல்றாங்க" இது தான் ஆரி பேசின விஷயம்.
சாம் கேப்டன் ஆன முத நாள் நடந்த விஷயம் இது. இன்னும் அதை மறக்காம புதுசு புதுசா குற்றம் கண்டுபிடிச்சு சொல்லிட்டு இருக்காரு ஆரி. அந்த பிரச்சினை கமல் சார் முன்னாடி பேசப்பட்டு, அதுக்கு அர்ச்சனாவே ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தாங்க. இங்க ஆரி குறிப்பிடறா மாதிரி கடமையை செய்ய தவறினார்னு சொல்றதே ரொம்பவும் தவறான குற்றச்சாட்டு. அப்படியே கடமை தவறிட்டாருனு சொன்னா, அங்க கடமை தவறினது அர்ச்சனா தான். அதை பத்தி அர்ச்சனா ரெண்டு தடவை விளக்கம் கொடுத்தாங்க.அந்த ரெண்டு முறையும் வாயை மூடிட்டு உக்காந்து கேட்டுட்டு இருந்தார். எந்த பதிலும் சொல்லலை. ஆனா இன்னும் அதே குற்றச்சாட்டை திரும்ப திரும்ப பேசிட்டு இருக்காரு.
பொதுவாக யார் கூடவாவது பிரச்சினை வந்தா கூப்ட்டு உக்கார வச்சு பேசறது ஆரியோட பழக்கம். சாம் கூட வழக்கு மன்றத்துல பிரச்சினை வந்த அன்னிக்கே, சமாதானம் பேச கூப்பிட்டாங்க சாம். ஆனா தேவையில்லாம பாலா கூட சண்டை போட்டுட்டு அதுல இருந்து எஸ்கேப் ஆகிட்டாரு. அதுக்கப்புறம் நாலு வாரம் ஆச்சு. இப்ப வரைக்கும் சாம் கூட உக்காந்து பேசலை. முயற்சி கூட செய்யலை. அந்தளவு ஆரிக்கும் சாம்க்கும் தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. ஆனா ஆரி இதை தொடர்ந்துட்டே இருக்கறதும், சம்யுக்தாவை தொடர்ச்சியா டார்கெட் செஞ்சுட்டு இருக்கறதும் ரொம்பவுமே தவறான செயல். ஆரி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்துக்கு இந்த செயல் ரொம்பவும் கீழ்தரமானது.
எப்பவோ நடந்த விஷயத்துக்காக சாமை நாமிநேட் செய்யறாரு ஆரி. அதே விஷயத்தை பேசி இரிடேட் செய்யறாங்க . புதுசா ஒரு காரணம் கண்டுபிடிச்சு சாமை நாமினேட் செய்யறது அனிதா.
ஆனா 3 பேரும் எந்த குரூப்பும் கிடையாதுனு சத்தியம் பண்றாங்க. நம்புவோமாக.
எப்பவோ நடந்து முடிஞ்சு போன ஒரு விஷயத்தை மனசுல வச்சுட்டு, இவ்வளவு வன்மத்தோட ஒரு உதாரணம் சொல்லிருக்க வேண்டியதில்லை.
ஆரி பேசினதும் பிரச்சினையாக வாய்ப்பிருக்கு....