சொகுசாக செல்ல கார்.. செலவுக்கு பணம்.. கணவன் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..!

கரூர் மாவட்டத்தில் கணவன் வரதட்சணையாக கார் மற்றும் பணம் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வெண்ணிலா. கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு 26 வயதில் பவித்ரா என்ற மகள் உள்ளார். பவித்ராவுக்கும் கரூரில் பொறியாளனாக இருக்கும் பிராகாஷ் குமாருக்கும் (29) ஒரு ஆண்டுக்கு முன் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பவித்ராவின் பெற்றோர்கள் வரதட்சணையாக 40 சவரன் நகையும் மற்றும் பல சீர்வரிசை பொருள்களை வழங்கியுள்ளனர். பவித்ராவின் திருமண வாழ்க்கை 6 மாதங்கள் சந்தோஷமாகத் தான் இருந்துள்ளது. ஆனால் அதன் பிறகு தான் பிரகாஷின் கொடிய முகம் வெளியே வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து பவித்ராவை உங்கள் வீட்டிற்கு சென்று வரதட்சணையாகப் பணம் வாங்கி வா என்று தினம் தோறும் பவித்ராவை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். கடந்த ஒரு சில மாதங்களாக கார் வேண்டும் என்று கேட்டு பவித்ராவை பயங்கரமாகக் கொடுமை செய்துள்ளார்.

இதனைத் தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த வந்த பவித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பவித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் இது திட்டம் தீட்டிச் செய்யப்பட்ட கொலை என்று திட்டவட்டமாகக் கூறினார்கள். அதுமட்டும் இல்லாமல் தற்கொலையாக இருக்கும் இந்த வழக்கு கொலையாக மாறும் வரை பவித்ராவின் உடலை வாங்க மாட்டோம் என்று முற்றுகையிட்டு வருகின்றனர்.

More News >>