புரட்டிப் போட்ட புயல்கள்.. புள்ளி விவரத் தொகுப்பு

1890ஆம் ஆண்டு முதல், 2002 வருடம் வரையான காலகட்டத்தில் தமிழகத்தைத் தாக்கிய புயல்களின் எண்ணிக்கை 54.அதாவது 2002 முதல் 2018 வரையான 16 ஆண்டுகளில் மட்டும் 10 புயல்களைச் சந்தித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.அதுவும் , 2014 முதல் 2020 வரையிலான ஆறு ஆண்டுகளில் மட்டும் ஐந்து புயல்கள் ஆட்டம் போட்டது.தானே,ஒக்கி, வர்தா, கஜா இப்போது நிவர், சராசரியாக 15 மாதங்களுக்கு ஒரு புயல் என்ற விகிதப் படி புயல் தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது.

1966-ம் ஆண்டு உருவான புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 1977-ம் ஆண்டு மற்றொரு புயல் தமிழகம் நிலை குலைந்தது. திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகள் இந்த புயலால் கடும் சேதத்தைச் சந்தித்தன.2005-ம் ஆண்டில் பியார், பாஸ், ஃபர்னூஸ் என்ற மூன்று புயல்கள் வங்கக் கடலில் உருவாகியிருந்தன. இதில் ஃபர்னூஸ் புயல் மட்டும் கடும் பாதிப்புகளை விளைவித்தது.

இந்தப் புயலில் தமிழகமே வெள்ளக்காடானது. எல்லா நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன. மாநிலம் முழுவதும் மிக கடுமையான பயிர்ச்சேதம் ஏற்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.2008 நவம்பர் 24-ம் தேதி நிஷா புயல் தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கக் கடலில் உருவான மிகப்பெரிய புயல் இது தான் என நிபுணர்கள் கணித்தனர்.

நிஷா புயலின் தாக்கத்தினால் 170 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரம் கால்நடைகள் பலியாயின. சுமார் ஒன்றரை இலட்சம் வீடுகள் சின்னாபின்னமாகின. 12 மாவட்டங்கள் இந்த புயலால் நிலைகுலைந்து போனது.

2016 இல் உருவான வர்தா புயலால் சுமார் ஆயிரம் கோடி அளவில் சேதம் ஏற்பட்டது. 2107இல் வந்த ஓஹி புயல் சென்னையை விட்டு விட்டு குமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்டது.2018இல் வந்த கஜா புயல் 10 மாவட்டங்களைப் பதம் பார்த்தது பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம் ஆயின 60 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு பானி மற்றும் கியார் புயல்கள் வந்து சென்றது எனினும் இதனால் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய பாதிப்பு ஏதுமில்லை .

இந்த ஆண்டு நிவர் வந்திருக்கிறார். இவர் என்ன செய்யப்போகிறார் என்று பொருத்திருந்து பார்ப்போம்..

More News >>