முதன்முறையாக ஐபிஎல் போட்டிகளில் யோ-யோ சோதனை!
ஐபிஎல் 2018 தொடரில் முதன்முறையாக யோ-யோ எனப்படும் உடல்தகுதி சோதனை நடைபெறவுள்ளது.
விளையாட்டு உலகில் முதன் முறையாக யோ-யோஎனப்படும் டிஎன்ஏ சோதனையுடன் கூடிய சோதனை அமெரிக்காவில் நடைபெறும் கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன.
யோ-யோ சோதனை என்பது வெறும் டிஎன்ஏ சோதனை மட்டுமல்ல. வேகம், சுறுசுறுப்பு, செயல்படும் திறன் போன்ற பயிற்சியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி கேப்டனாக பொறுப்பெற்றதிலிருந்து யோ-யோ சோதனைக்கு முன்னுரிமை அளித்து பிசிசிஐ ஒப்புதலுடன் வீரர்களை தேர்வு செய்து வந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தங்கள் அணி வீரர்களுக்கு யோ-யோ சோதனையை அளிக்க விரும்புவதாக பெரும்பாலான அணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யோ-யோ சோதனையில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, வீரர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திற்கும் 14.5 விநாடி வீதம் 5 கட்டமாக நடத்தியது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com