உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் கருப்பட்டி தோசை ரெசிபி செய்வது எப்படி??

கருப்பட்டி தோசை மிகவும் இனிப்பாக இருக்கும்.இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த காலத்தில் உடல் வலிமை பெறுவதற்கு இந்த தோசை தான் அடிக்கடி சாப்பிடுவார்கள் அல்லது கருப்பட்டி கலந்த உணவைச் சாப்பிட்டால் சுறுசுறுப்பாக வேலை செய்யவும் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது.. சரி வாங்கக் கருப்பட்டி கலந்த தோசையை எப்படிச் செய்வது குறித்துப் பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-

கருப்பட்டி - 1/4 கிலோபச்சரிசி - ஒரு கப்உளுத்தம் பருப்பு - 1/4 கப்வெந்தயம் - 1 ஸ்பூன்ஏலக்காய்த்தூள் - 1/4 ஸ்பூன்தேங்காய் துருவல் - 1/2 கப்வேர்க்கடலை - ஒரு கப்சுக்குப்பொடி - 1/2 ஸ்பூன்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போன்றவற்றைச் சேர்த்து சுமார் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டியது அவசியம். பிறகு ஊற வைத்ததைத் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். புளித்த மாவு தான் தோசைக்குச் சுவையாக இருக்கும் என்பதால் ஒரு இரவு முழுவதும் மாவு புளிக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இடித்த வெல்லத்தைச் சேர்த்து தண்ணீரோடு கொதிக்க விடவும். கொதிக்கும் பொழுது ஏலக்காய்த் தூள், சுக்கு பொடி மற்றும் துருவின தேங்காய் ஆகியவை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

அரைத்த மாவில் காச்சின வெல்லப் பாகை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை உற்ற வேண்டும். மாவு நன்றாக வெந்தவுடன் கருப்பட்டி தோசை தயார். இதற்கு தொட்டுக்க எதுவும் தேவை இல்லை அப்படியே சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..

More News >>